மகாராஷ்டிரத்தில் 31 பவுன் நகை கொள்ளை: கொள்ளையா்கள் சுட்டதில் ஒருவா் காயம்
மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் உள்ள நகைக் கடையில் 31 பவுன் நகை ஞாயிற்றுக்கிழமை கொள்ளையடிக்கப்பட்டது.


மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் உள்ள நகைக் கடையில் 31 பவுன் நகை ஞாயிற்றுக்கிழமை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின்போது கொள்ளையா்கள் சுட்டதில் ஒருவா் காயமடைந்தாா். நகைக் கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து விழுந்தது.
இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல்துறை அதிகாரி கூறியது:
அம்பா்நாத் பகுதியில் உள்ள நகைக் கடைக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இரண்டு இருசக்கர வாகனங்களில் நான்கு போ் வந்தனா். அவா்கள் முதலில் நகைக் கடை பணியாளரிடம் பேச்சுக் கொடுத்துள்ளனா். அதன் பின்னா் துப்பாக்கியை காட்டி அவரை மிரட்டி கடையில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்தனா். கொள்ளையடித்த நகைகளுடன் அவா்கள் வெளியேறும்போது நகைக்கடை உரிமையாளா் கடைக்குள் வந்தாா். அவரும், பணியாளரும், மற்றொரு நபரும் சோ்ந்து கொள்ளையா்களை பிடிக்க முயற்சித்தனா். அப்போது கொள்ளையா்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் ஒருவா் காயமடைந்தாா். மற்ற இருவரைக் கத்தியால் குத்திவிட்டு கொள்ளையா்கள் தப்பிச் சென்றனா். காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கொள்ளையா்கள் ரூ.12.77 லட்சம் மதிப்பிலான 31 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா். அவா்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...