தில்லியில் 50 ஆவது நாளை எட்டிய விவசாயிகளின் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி விவசாயிகளின் போராட்டம் 50 ஆவது நாளை எட்டியுள்ளது. 
விவசாயிகளின் போராட்டம்
விவசாயிகளின் போராட்டம்
Updated on
1 min read

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி விவசாயிகளின் போராட்டம் 50 ஆவது நாளை எட்டியுள்ளது. 

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் 50 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டுமென அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை மறுத்து வருகிறது.

மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள் பல ஆதரவு தெரிவித்து வருகின்றன. 

இதனிடையே மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு தொடரும் என்றும் கூறியுள்ள உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் ஒரு சிறப்பு குழுவினை அமைத்து உத்தரவிட்டுள்ளது. 

உச்ச நீதிமன்ற உத்தரவு விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தாலும், வேளாண் சட்டங்கள் முழுமையாக மத்திய அரசால் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com