ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி!

 உத்தரப்பிரதேசத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
உத்தரப்பிரதேசத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Updated On :13 ஜனவரி 2021, 11:34 am

DIN

முசாபர்பூர்: உத்தரப்பிரதேசத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அந்த மாவட்டத்தின் மண்டல உதவி காவல் அதிகாரி ராஜேஷ் குமார் ஷர்மா செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியுள்ளதாவது:

உத்தரப்பிரதேசத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் 11-ஆம் தேதியன்று அவரது வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து அந்த நால்வரும் அந்தப் பெண்ணை எரித்துக் கொல்ல முயன்றுள்ளனர். பின்னர் அக்கம பக்கத்தினரின் துணையுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் புதன் காலை மரணமடைந்தார்.

அவளது தந்தை  அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைதுசெய்யும் பணியில் காவல்துறை தீவிரமாக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.