தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வடமேற்கு மாநிலங்களில் குளிர் அதிகரிக்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களில் அடுத்த 2 நாள்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

வடமேற்கு மாநிலங்களில் குளிர் அதிகரிக்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

Updated On :15 ஜனவரி 2021, 10:55 am

பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களில் அடுத்த 2 நாள்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு இந்தியாவில் வறண்ட காற்றின் தாக்கம் காரணமாக பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், தில்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கிழக்கு மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் குளிர்ந்த அலை அல்லது கடுமையான குளிர் அலை வீசக்கூடும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த இரண்டு நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், லட்சத்தீவுப் பகுதிகளில் மிதமான இடியுடன் கூடிய மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.