புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரசு சார்பில் யாரும் ஏன் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை? மணீஷ் திவாரி எம்.பி. கேள்வி

கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது எனில் அரசு பிரதிநிதிகள் யாரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது ஏன் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

News image

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி

Updated On :16 ஜனவரி 2021, 10:12 am

DIN

கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது எனில் அரசு பிரதிநிதிகள் யாரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது ஏன் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

கரோனா தொற்று பாதிப்பைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் கரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி அரசு பிரதிநிதிகள் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பிற நாடுகளில் அரசின் சார்பில் பிரதமர்களும், சுகாதார அமைச்சர்களும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளும்போது இங்கு மட்டும் அரசுப் பிரதிநிதிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தவிர்ப்பதாகவும் குறித்தும் மணீஷ் திவாரி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.