விவசாயத்தை அழிப்பதற்காகவே வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல்

வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்திலேயே மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டினார்.

தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியது:

"புதிய வேளாண் சட்டங்கள் வேளாண் துறை முழுவதையும் 3 முதல் 4 முதலாளிகளின் வசம் ஒப்படைக்கிறது. வேளாண் துறையை அழிப்பதற்கான நோக்கத்திலேயே வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நூறு சதவிகிதம் நான் விவசாயிகளை ஆதரிக்கிறேன். நமக்காக போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். 

இதற்கான ஒரே தீர்வு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது. 

பிரதமரோ, வேறு யாரோ. எனக்கு யாரைப் பார்த்தும் பயமில்லை. நான் எந்தத் தவறும் செய்யாதவன். அவர்களால் என்னைத் தொட முடியாது. என்னை சுடலாம், ஆனால் தொட முடியாது. நான் தேசப் பற்று உடையவன். எனது நாட்டை நான் பாதுகாப்பேன். பாதுகாத்துக்கொண்டே இருப்பேன்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com