சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

விவசாயிகளின் போராட்டம் குறித்த அடிப்படைப் புரிதல் இல்லாமல் இருக்கிறார் பிரதமர்: ராகுல் காந்தி

தில்லியில் விவசாயிகளின்  போராட்டம்  குறித்து பிரதமர் மோடி அடிப்படை  புரிதல் இல்லாமல் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

News image
ராகுல்காந்தி
Updated On :20 ஜனவரி 2021, 6:16 am

DIN

விவசாயிகளின்  போராட்டம்  குறித்து பிரதமர் மோடி அடிப்படைப் புரிதல் இல்லாமல் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

தில்லியில் வேளாண் சட்டங்கள் குறித்த புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய ராகுல் காந்தி,  'இது டிரம்ப்பின் சர்க்கார்' என்று கூறியிருந்த பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்க 'கேபிடல்' வன்முறை குறித்து, 'வாஷிங்டனில் கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகளைக் கண்டு வருத்தம் அடைந்தேன். அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடக்க வேண்டும். சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறைகளைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது' என்று கூறியிருந்தார்.

மேலும், அமெரிக்க வன்முறையை அடுத்து தில்லியில் விவசாயிகளின் போராட்டம் அமைதி கண்டுள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளது அவருக்கு அடிப்படை புரிதல் இல்லாததைக் காட்டுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் குலைக்கும் வகையில் மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. மேலும் தில்லியில் விவசாயிகளின் போராட்டத்தையும் அவமதித்து வருகிறது. பிரதமர் மோடியைக் கண்டு எனக்கு பயமில்லை. விவசாயிகளின் போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பேன். 

விவசாயிகளின் போராட்டத்தின் மூலம் நாடு மிகப்பெரிய பேரிடரை எதிர்கொள்கிறது. ஆனால், மத்திய அரசு இதனை மறைக்க முற்படுகிறது. மக்களுக்குத் தவறான தகவல்களை அளிக்கிறது. விவசாயிகளின் பிரச்னை என்பது பேரிடரின்  ஒரு பகுதிதான். இதுபோன்று நாட்டில் வெளிவராத பல்வேறு பிரச்னைகள் உள்ளன' என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.