கரோனா: சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.86 சதவீதமாக குறைவு
நாட்டில் கரோனாவுக்குச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,92,308 ஆக குறைந்துள்ளது. கரோனா தொற்றில் இருந்து 96.70 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.


புது தில்லி: நாட்டில் கரோனாவுக்குச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,92,308 ஆக குறைந்துள்ளது. கரோனா தொற்றில் இருந்து 96.70 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வியாழக்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 15,223 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,06,10,883-ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றில் இருந்து மேலும் 19,965 பேர் குணமடைந்தனர். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,02,65,706-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.70 சதவீதமாகும். கரோனா தொற்றுக்கு மேலும் 151 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,52,869-ஆக அதிகரித்துள்ளது.
7 மாதங்களுக்குப் பிறகு நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 1,97,308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது, மொத்த பாதிப்பில் 1.86 சதவீதமாகும்.
இதற்கு முன்பு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27-ஆம் தேதி, 1,97,387 பேர் சிகிச்சையில் இருந்தனர்.
நாட்டில் இதுவரை 8,06,484 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தகவல்படி, ஜனவரி 20-ஆம் தேதி வரை 18,93,47,782 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், புதன்கிழமை மட்டும் 7,80,835 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...