ஆக்ரா: முகலாயர் காலத்து 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படும் தண்ணீர் தொட்டியை ஆக்ரா அருகே ஃபதேஹ்புர் சிக்ரியில் இந்திய தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
தொல்லியல் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டிருக்கும் தோடர்மல் பராதாரி கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு அருகே ஆய்வுப் பணிகள் நடந்து கொண்டிருந்த போது இந்த தண்ணீர் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாராதரி என்பது காற்றோட்டம் அதிகமாக வருவதற்கு ஏற்ப 12 கதவுகளைக் கொண்ட ஒரு கட்டட அமைப்பாகும்.
இந்திய தொல்லியல் துறையின் ஆக்ரா பகுதி கண்காணிப்பாளர் வசந்த் ஸ்வரங்கர் கூறுகையில், தொல்லியல் ஆய்வின் போது, ஒரு சதுர வடிவிலான தண்ணீர் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் கூரைப் பகுதி சுண்ணாம்பு பூசப்பட்டுள்ளது. தண்ணீர்தொட்டியின் சுவர் பகுதிகளும் சுண்ணாம்பு பூச்சால் மூடப்பட்டுள்ளது. பாராதரி கட்டப்பட்டபோதே, இந்த தண்ணீர் தொட்டியும் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாராதரி மற்றும் தற்போது தண்ணீர் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், இப்பகுதியல் மேலும் தொல்லியல் ஆய்வுகளை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்

ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!
10 கோடி பார்வைகளைக் கடந்த முட்ட கலக்கி!

ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


