குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

அடுத்த இரு ஆண்டுகளில் 6 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி: ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சி அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆறு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்று கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார். 

News image

அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)

Updated On :28 ஜனவரி 2021, 7:50 am

ஆம் ஆத்மி கட்சி அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆறு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்று கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார். 

அதன்படி, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப், இமாசலப் பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வரும் இரண்டு ஆண்டுகளில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும் என்று கட்சியின் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

கபாஷேராவில் நடைபெற்ற கட்சியின் தேசிய சபைக் கூட்டத்தில் பேசிய கேஜரிவால், தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் நல்லாட்சி குறித்து நாடு முழுவதுமுள்ள மக்கள் பேசுகிறார்கள். தில்லியில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என மற்ற மாநில மக்களும் விரும்புகின்றனர். அதற்காக, நாங்கள் ஒரு வலுவான அமைப்பை உருவாக்க வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆறு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். எங்களுடைய ஆட்சிக்காக மக்கள் தயாராக இருக்கிறார்கள், நாமும் தயாராவோம்' என்று குறிப்பிட்டுள்ளார். 

2012ல் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி தில்லியில் ஆட்சியைப் பிடித்ததுடன் கோவா மற்றும் காஷ்மீர் உள்ளாட்சித்  தேர்தல்களில் தனது கால்தடத்தைப் பதித்துள்ளது. மற்ற மாநிலங்களிலும் கால் பதிக்க முயற்சித்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.