சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தில்லி வன்முறை: வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவசாயப் பிரதிநிதிகளுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

தில்லியில் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு தில்லி காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

News image
Updated On :28 ஜனவரி 2021, 5:57 am

DIN

தில்லியில் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு தில்லி காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

தில்லியில் குடியரசு நாளன்று (செவ்வாய்க்கிழமை) டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 22 விவசாய அமைப்பு பிரதிநிதிகளின் மீது எப்.ஐ. ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

காவல்துறை கட்டுப்பாட்டை மீறி உள்நுழைந்தது மட்டுமின்றி செங்கோட்டையை அவமதித்ததால் சம்மந்தப்பட்ட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி காவல்துறை தெரிவித்திருந்தது. அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு தில்லி காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அவர்களது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் வெளிநாட்டினருக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில்  அனைத்து விமான நிலையங்களிலும் இந்த பட்டியலை அனுப்பவும் காவல்துறை முடிவெடுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் காவல்துறை இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட 22 பேருக்கு விளக்கம் கேட்டு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.