எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேளாண் சட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே எம்.பி.க்கள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே இடதுசாரி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
நாடாளுமன்றத்திற்கு வெளியே இடதுசாரி எம்.பி.க்கள் போராட்டம்
Updated On :29 ஜனவரி 2021, 6:19 am

DIN


வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே இடதுசாரி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற வாயிலில் கைகளில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு நாடாளுமன்ற சாலைகளில் ஊர்வலமாக வந்தனர்.

நடப்பாண்டுக்கான முதல் பட்ஜெட் கூட்டம் குடியரசுத்தலைவர் உரையுடன் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது.

பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு வருகைப் புரியும்போது இடது சாரி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வாயிலில் திரண்டனர்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றும் குடியரசுத் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை உறுப்பினர்களின் ஒப்புதலின்றி சட்டமாக நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி எம்.பி.க்கள் நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலையில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் நாடாளுமன்ற வாயிலில் பதாகைகளை ஏந்தி நின்றவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரையை புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.