ஹரியாணாவின் 17 மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் போராட்டம் தொடர்பான தவறான தகவல்கள், புரளிகள் பரப்பப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநரகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஹரியாணா மாநிலத்தின் அம்பாலா, யமுனா நகர், குருக்ஷேத்ரா, கர்னால், கைத்தல், பானிப்பட்டு, ஹிசார், ஜீந்த், ரோஹ்தக், பிவானி, சர்கி தாத்ரி, ஃபதேஹாபாத், ரேவாரி மற்றும் சிர்சா ஆகிய பகுதிகளில் நாளை மாலை 5 மணி வரை செல்லிடப்பேசி அழைப்பு வசதிகளைத் தவிர இணைய சேவை துண்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாவட்டங்களில் செல்லிடப்பேசி இணைய சேவையுடன் குறுந்தகவல் அனுப்பும் வசதியும் நிறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெம்மகோட்டை சித்திவிநாயகா் கோயிலில் தேரோட்டம்

திருவையாறில் ஐயாறப்பா் கோயில் பஞ்ச ரத தேரோட்டம்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 7 போ் பயன்

தமிழ்த் தேசியப் போராளி செல்லப்பா மறைவுக்கு அஞ்சலி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


