தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

News image

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Updated On :29 ஜனவரி 2021, 10:50 am

மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மாநிலங்களவையிலும் அவர் தாக்கல் செய்தார்.

அதில் நடப்பாண்டில் பொருளாதாரம் 7.7 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022-ம் ஆண்டு இது 11.5 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும் எண்ணிய தேய்த்துச் சென்று என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்த பிறகு நிதியமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியம் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து மாநிலங்களவையும் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.