உத்தரப் பிரதேசத்தில் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளுடன் வந்துகொண்டிருந்த பேருந்து மோது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
குந்தர்கி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நான்பூர் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்ய நாத் அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ வசதி கிடைப்பதையும் முதல்வர் உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கனடா பிரதமர் இந்தியா வருகை! மும்பையில் உற்சாக வரவேற்பு!

நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்! விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
வெல்லமண்டி என். நடராஜன் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்!
இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! என்ன காரணம்?
வீடியோக்கள்
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

