பாஜக-அதிமுக இணைந்து தேர்தலை சந்திக்கும்: ஜெ.பி.நட்டா
பாஜக-அதிமுக இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.


பாஜக-அதிமுக இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், பாஜக-அதிமுக இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும். தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும்.
அதற்கு பாஜகவை ஆதரிக்க வேண்டும். பாஜக ஆட்சியில் சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வேலைவாய்ப்புத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரைக்கு அதிகளவில் வளர்ச்சி கட்டமைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன என்றார்.
இதன்மூலம் பாஜக-அதிமுக கூட்டணியை நட்டா, இன்று உறுதி செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...