எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இதுவரை 35 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் சனிக்கிழமை வரை 35,00,027 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2021, 5:04 am

DIN

நாடு முழுவதும் சனிக்கிழமை வரை 35,00,027 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 5,71,974 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஒட்டுமொத்தமாக 35,00,027 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 4,63,793 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 3,24,973 பேருக்கும், கா்நாடகத்தில் 3,07,891 பேருக்கும், மகாராஷ்டிரத்தில் 2,61,320 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் 2,46,281 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 2,21,994 பேருக்கும், குஜராத்தில் 2,21,675 பேருக்கும், ஒடிஸாவில் 2,05,200 பேருக்கும், ஆந்திரத்தில் 1,79,038 பேருக்கும், தெலங்கானாவில் 1,66,606 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கு முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலிருந்து முன்களப் பணியாளா்களுக்கும் தடுப்பூசி வழங்குமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.