மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தில்லியில் தூதரக குண்டு வெடிப்பு தீவிரவாத தாக்குதல்: இஸ்ரேல் தூதர்

தில்லியில் இஸ்ரேல் தூதரக குண்டு வெடிப்பு சம்பவம் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரோன் மல்கா தெரிவித்துள்ளார்.

News image
இஸ்ரேல் தூதர் ரோன் மல்கா
Updated On :30 ஜனவரி 2021, 8:18 am

DIN

தில்லியில் இஸ்ரேல் தூதரக குண்டு வெடிப்பு சம்பவம் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரோன் மல்கா தெரிவித்துள்ளார்.

தில்லி அப்துல் கலாம் சாலையில் உள்ள இஸ்ரேல் நாட்டின் தூதரகத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமை (ஜன.29) மாலை 5.05 மணியளவில் சக்தி குறைந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படாத நிலையில், 3 கார்கள் மட்டுமே சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் விசாரணைக் குழுவினரும், இந்திய விசாரணைக் குழுவினரும் இணைந்து இஸ்ரேல் தூதரகப் பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே இது குறித்து பேசிய இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரோன் மல்கா கூறியதாவது, இப்போது இருப்பதை போன்று இந்தியா மற்றும் இஸ்ரேல் அதிகாரிகளிடையே எப்பொழுதும் முழுமையான இணக்கம் இருந்துள்ளது. 

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம். குண்டு வெடிப்பு நிகழ்ந்த நேற்று (ஜன.29) இந்தியா - இஸ்ரேல் இடையேயான உறவு நிறுவப்பட்ட 29-ம் ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. அந்த தினத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.