கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனா: நாடு முழுவதும் மேலும் 13,052  போ் பாதிப்பு

நாடு முழுவதும் மேலும் 13,052  பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

News image
கரோனா பரிசோதனை
Updated On :31 ஜனவரி 2021, 7:06 am

DIN

நாடு முழுவதும் மேலும் 13,052  பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 13,052 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,07,46,183-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 13,965  போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,04,23,125-ஆக அதிகரித்தது. 

கரோனா தொற்றுக்கு மேலும் 127 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,54,274 -ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையில்  இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் 1,68,784 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, இதுவரை 19,65,88,372 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், சனிக்கிழமை மட்டும் 7,50,964 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

"நாடு முழுவதும் சனிக்கிழமையுடன் பிதினைந்து நாள்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்தை தாண்டியுள்ளது"  என்று சுகாதார அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.