/

'மோடியால் சாத்தியம்' - சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து ப.சிதம்பரம் ட்வீட்

சமையல் எரிவாயு விலை உயர்வு 'மோடியால் சாத்தியம்' என காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். 

News image
ப. சிதம்பரம்
Updated On :28 ஜனவரி 2024, 3:32 am

DIN

சமையல் எரிவாயு விலை உயர்வு 'மோடியால் சாத்தியம்' என காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். 

கரோனா பெருந்தொற்று, பொதுமுடக்கத்துக்கு இடையே நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை ரூ. 100-ஐ கடந்துள்ளது. இதையடுத்து மானிய சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தில்லியில் 14.2 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயு ஒரு உருளை ரூ. 834.50 ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம், கடந்த நவம்பர், 2020  முதல் ஜூலை, 2021 விலை ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு விலை எவ்வளவு உயர்ந்துள்ளது  என்பதை கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டு 'மோடியால் சாத்தியம்' என்று குறிப்பிட்டுள்ளார். 

அவர் தனது பதிவில், 

மோடியின் அரசின் சமையல் எரிவாயு உருளை விலைகள் -2020 முதல் 2021 வரை:

நவம்பர் 30, 2020: ₹594
டிசம்பர் 1, 2020: ₹644
ஜனவரி  1, 2021: ₹694
பிப்ரவரி 4, 2021: ₹719
பிப்ரவரி 15, 2021: ₹769
மார்ச் 1, 2021: ₹819
ஜூலை 1, 2021:  ₹834 எனப் பதிவிட்டுள்ளார். 

Mr Modi’s government and LPG prices in 2020 to 2021:
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.