கேரளம் உள்பட 6 மாநிலங்களில் கரோனா அதிகரிப்பு : மத்தியக் குழு விரைந்தது
கேரளம், திரிபுரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், அங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க


புது தில்லி: கேரளம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மணிப்பூரில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், அங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க நிபுணர் குழுக்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
கொவிட் மேலாண்மை நடவடிக்கையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் முயற்சிகளை வலுப்படுத்த, நிபுணர் குழுக்களை மத்திய அரசு அவ்வப்போது அனுப்பி வருகிறது.
இந்த குழுவினர் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை புரிந்து கொண்டு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த ஆலோசனை வழங்குவர்.
தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்: ஐவர்மேக்டின் என்றோர் அருமருந்து: மறைக்கிறதா மருத்துவத் துறை?
அதன்படி பன்நோக்கு ஒழுங்கு குழுக்களை, கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள கேரளம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு இன்று அனுப்பியுள்ளது. அவசரகால மருத்துவ நிவாரணப் பிரிவு துணை தலைமை இயக்குனர் டாக்டர் எல் ஸ்வஸ்திசரன் தலைமையிலான குழுவினர் மணிப்பூருக்கும், அகில இந்திய பொது சுகாதார மையத்தின் பேராசிரியர் டாக்டர் சஞ்ஜே சாதுகன் தலைமையிலான குழுவினர் அருணாச்சலப் பிரதேசத்துக்கும், டாக்டர் ஆர்.என். சின்ஹா தலைமையிலான குழுவினர் திரிபுராவுக்கும், பொது சுகாதார நிபுணர் டாக்டர் ருச்சி ஜெயின் தலைமையிலான குழுவினர் கேரளத்துக்கும், பொது சுகாதார நிபுணர் டாக்டர் ஏ. டான் தலைமையிலான குழுவினர் ஒடிசாவுக்கும், ராய்ப்பூர் எய்ம்ஸ் உதவி பேராசிரியர் டாக்டர் திபாகர் சாகு தலைமையிலான குழுவினர் சத்தீஸ்கருக்கும் செல்கின்றனர்.
கொவிட் கட்டுப்பாடு, மேலாண்மை மற்றும் நடவடிக்கைகளுக்கு இந்த குழுவினர் உதவுவர். இந்த இரண்டு உறுப்பினர் குழுவில், மருத்துவர் ஒருவரும், பொது சுகாதார நிபுணர் ஒருவரும் இடம் பெறுவர். இந்த குழுவினர் உடனடியாக அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று, கொவிட் மேலாண்மை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிப்பர்.
கொவிட் பரிசோதனை, தொடர்புகள் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கொவிட் தடுப்புநடவடிக்கைகள், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, மருத்துவ ஆக்ஸிஜன் வசதி மற்றும் இதர வசதிகளை கண்காணிப்பர். கொவிட் தடுப்பூசி நடவடிக்கைகளையும் இவர்கள் கண்காணிப்பர். இந்த குழுவினர் அந்தந்த மாநிலங்களில் நிலைமையை கண்காணித்து, தீர்வு நடவடிக்கைகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...