ஜூலை 19 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
ஜூலை 19ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


ஜூலை 19ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், வழக்கமாக ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர விழாவுக்கு முன்பாக முடிவடையும். அதுபோலவே, இந்த ஆண்டும் மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 19-ஆம் தேதி முதல் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டத்தொடரில் தடுப்பூசி விவகாரம், பெட்ரோல், டீசால், விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப வாய்ப்பு உள்ளன. கடந்த முறை கரோனா பரவலால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக, மாநிலங்களவை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரையிலும் நடத்தப்பட்டது.
இருப்பினும் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதியில், இரு அவைகளும் வழக்கம்போல் காலை 11 மணிக்குத் தொடங்கி நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...