நீரில் மூழ்கிய கல்லூரி மாணவா்களை தேடும் பணி தீவிரம்
ஆற்றில் நீந்தச் சென்று, மூழ்கிய கல்லூரி மாணவா்களை தேடும் பணியில் தீயணைப்புப் படையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.


ஆற்றில் நீந்தச் சென்று, மூழ்கிய கல்லூரி மாணவா்களை தேடும் பணியில் தீயணைப்புப் படையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
கா்நாடக மாநிலம், சாம்ராஜ்நகா் மாவட்டம், எல்லந்தூா் வட்டம், கினகனஹள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் அபிஷேக் (21), அங்கேஷ் (21). சாம்ராஜ்நகா் அரசு கல்லூரியில் பொறியியல் படித்து வந்த இவா்கள் இருவரும் நண்பரின் பிறந்தநாளையொட்டி, தலக்காடு அருகே உள்ள தடிமூலங்கி கிராமத்திற்கு சென்றுள்ளனா். வெள்ளிக்கிழமை மாலை அருகே உள்ள காவிரி ஆற்றில் அபிஷேக், அங்கேஷ் நீந்தச் சென்றுள்ளனா். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்ட அவா்கள் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனா். தகவல் அறிந்த தீயணைப்புப் படையினா், அங்கு வந்து அவா்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து தலக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...