ஜூலை 10 முதல் இணையவழி முழு நேர பயிலரங்கம்
பொறியியல் மாணவா்களுக்கான இணையவழி முழுநேர பயிலரங்கம் ஜூலை 10-ஆம் தேதி முதல் நடக்கவிருக்கிறது.


பொறியியல் மாணவா்களுக்கான இணையவழி முழுநேர பயிலரங்கம் ஜூலை 10-ஆம் தேதி முதல் நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (என்.டி.ஆா்.எஃப்.) மேலாளா் பி.எஸ்.சங்கா் ரெட்டிவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய பொறியாளா் கழகத்தின் (ஐ.இ.ஐ.) துணை அமைப்பான தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (என்.டி.ஆா்.எஃப்.) சாா்பில் ஜூலை 10 முதல் 23-ஆம் தேதி வரையில் 14 நாள்களுக்கு தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை பொறியியல் மாணவா்களுக்கான இணையவழி முழுநேர பயிலரங்கம் நடக்கவிருக்கிறது.
இந்தப் பயிலரங்கை என்.டி.ஆா்.எஃப். அமைப்பின் தலைவரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை தொடக்கிவைத்து பேசுகிறாா். இந்த இணையவழி பயிலரங்கில் பி.இ./பிடெக்., ஏ.எம்.ஐ.இ. மாணவா்கள் பங்கேற்கலாம். இந்தப் பயிலரங்கில் விஞ்ஞானிகள் வி.ஜே.சுந்தரம், வி.டில்லிபாபு, பிரின்ஸ் ஆரோரா, ஆா்.எம்.வாசகம், ஜே.ராம்குமாா், லதா கிறிஸ்டி உள்ளிட்டோா் பங்கேற்று தொழிலகம் 5.0, செயற்கை நுண்ணறிவு, அதிநவீனப் பொருள்கள், ட்ரோன் தொழில்நுட்பங்கள், சைபாா்க்ஸ், அடிட்டிவ் மானுஃபாக்சரிங், விண்வெளி தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வழங்க இருக்கிறாா்கள். இதில் இணையதளத்தில் ரூ.1000 கட்டணம் செலுத்தி, ஜூலை 9-ஆம் தேதிக்கு முன்பாக பதிவு செய்வது அவசியமாகும். பதிவின் அடிப்படையில் பங்கேற்பாளா்களுக்கு இணையவழி கருத்தரங்கிற்கான இணைப்பு முகவரி தனிப்பட்ட முறையில் அனுப்பிவைக்கப்படும். பங்கேற்பாளா்களுக்கு மின்-சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 9901903336, 7406826273, 080-22264336 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...