சர் லுட்விக் குட்மன் பிறந்தநாள்: கூகுள் வெளியிட்ட சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம்

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியை அறிமுகம் செய்து வைத்த சர் லுட்விக் குட்மன் பிறந்தநாளை கௌரவிக்கும் வகையில், பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை 
சர் லுட்விக் குட்மன் பிறந்தநாள்: கூகுள் வெளியிட்ட சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம்
சர் லுட்விக் குட்மன் பிறந்தநாள்: கூகுள் வெளியிட்ட சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம்

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியை அறிமுகம் செய்து வைத்த பேராசிரியர் சர் லுட்விக் குட்மன் பிறந்தநாளை கௌரவிக்கும் வகையில், பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.

ஜெர்மன் நாட்டில் 1899ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3ஆம் தேதி பிறந்த லுட்விக் குட்மன், மிகச் சிறந்த நரம்பியல் துறை நிபுணராக இருந்தவர். பாராலிம்பிக் விளையாட்டுகள் என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டை அறிமுகம் செய்தவர்.

நாசி படைகளின் தாக்குதலின் போது ஜெர்மனியிலிருந்து வெளியேறி பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். பிரிட்டனில் 1943ஆம் ஆண்டு பாதுகாப்பு படையில் பணியாற்றிய வீரர்களுக்கான முதுகெலும்பு காயங்களுக்கு சிகிச்சை  அளிக்கும் மையத்தை குட்மன் தொடங்கினார்.

ஸ்டோக்-மாண்டேவில் மருத்துவமனையில் முதுகெலும்பு காயங்கள் பிரிவின் தலைவராக இருந்த டாக்டர் லுட்விக் குட்மேன், முதுகெலும்பு காயங்களுடன் வரும் பாதுகாப்பு வீரர்களுக்கு சிகிச்சை அளித்தபோது, அவர்களுக்கு படுத்தபடியே அளிக்கப்படும் சிகிச்சையை விட, உடல் இயக்கத்துடன் அளிக்கப்படும் சிகிச்சை நல்ல பலனை அளிப்பதை சோதனையில் அறிந்து கொண்டு, அவர்களுக்கான சிகிச்சையில் விளையாட்டுகளை அறிமுகம் செய்தார். இதன் மூலம், பாதுகாப்பு வீரர்கள் தங்களை மறுகட்டமைப்பு செய்து கொள்ளவும் சுயமரியாதையுடன் வாழவும் பேருதவி புரிந்தது.

மாற்றுத்திறனாளிகளுக்கு இடையே ஸ்டோக் மாண்டேவில் மருத்துவமனையில் நடைபெற்று வந்த போட்டி, உலகளவில் கவனம் பெற்று, 1960ஆம் ஆண்டு உலகளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியாக 400 வீரர்களுடன் நடத்தப்பட்டது.

மருத்துவராக இருந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உலகின் கதவைத் திறந்து வைத்த குட்மன் 1980ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி மறைந்தார்.

முக்கிய சிறப்பு தினங்களில் அந்த நாளை நினைவு கூறும் அல்லது கௌரவிக்கும் பொருட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் சர் லுட்விக் குட்மன் பிறந்த தினத்தன்று அவரது பணியை கௌரவிக்கும் வகையில் ஒரு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com