பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆந்திரத்தில் 11 மாவட்டங்களில் ஊரடங்கு நேர தளர்வு

ஆந்திரத்தில் 11 மாவட்டங்களில் ஊரடங்கு நேரம் தளர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். 

News image
Updated On :5 ஜூலை 2021, 12:56 pm

DIN

ஆந்திரத்தில் 11 மாவட்டங்களில் ஊரடங்கு நேரம் தளர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். 

ஆந்திர மாநிலத்தில் வருகிற ஜூலை 8 முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், மாநிலத்தின் 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக மாநில அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது. 

கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி தவிர இதர 11 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்பட்ட சேவைகள் செயல்படும், எனினும் கடைகளை இரவு 9 மணிக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா நெறிமுறைகளை பின்பற்றி தியேட்டர்கள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்டவை செயல்பட அரசு அனுமதித்துள்ளது. 

கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை தளர்வுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்குறிப்பிட்ட இரு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு நேர்மறை விகிதம் 5 சதவீதமாகக் குறையும் வரை கட்டுப்பாடுகளை பின்பற்ற அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.