/

மகாராஷ்டிரத்தில் மேலும் 8,418 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 8,418 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :6 ஜூலை 2021, 3:18 pm

DIN

மகாராஷ்டிரத்தில் புதிதாக 8,418 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,548 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 171 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 61,13,335 ஆக உயர்ந்துள்ளது. இதில் 58,72,268 பேர் குணமடைந்துவிட்டனர். 1,23,531 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 1,14,297 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரத்தில் இறப்பு விகிதம் 2.01 சதவிகிதம். குணமடைவோர் விகிதம் 96.06 சதவிகிதம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.