புகழ்பெற்றம் ஹிந்தி திரைப்பட நடிகர் திலீப் குமார் உடல்நலக்குறைவால் மும்பையில் இன்று (ஜூலை 7) காலமானார். அவருக்கு வயது 98.
கடந்த ஜூன் 29-ம் தேதி சுவாசக் கோளாறு காரணமாக நடிகா் திலீப் குமாா் (98) மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே மருத்துவமனையில் இன்று காலை 7.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி திலீப்குமார் உயிர் இன்று பிரிந்தது. இதனை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
முகமது யூசூப் கான் என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் திலீப்குமார் பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் 1922-ம் ஆண்டு பிறந்தவர். 1944-ம் ஆண்டு ஸ்வார் படா என்ற படம் மூலம் அறிமுகமான இவர் 65-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களாகும்.
திரையுலகில் சிறப்பான பங்காற்றியமைக்காக தாதா சாகேப் பால்கே விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபுதாபி மீதான ஈரானின் தாக்குதலில் 5 இந்தியர்கள் படுகாயம்!

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிக் கணக்கைத் தொடங்குமா?

பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- தேடப்படும் 2 சந்தேக நபர்கள்

அண்ணாமலை தவிர முக்கிய நிர்வாகிகளை ஓரங்கட்டிய பாஜக!
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


