தில்லியில் இன்று பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியது

நாட்டின் பல மாநிலங்களில் கடந்த வாரமே பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட்ட நிலையில், தலைநகர் புது தில்லியில் இன்று பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியது.
தில்லியில் இன்று பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியது
தில்லியில் இன்று பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியது
Updated on
1 min read

புது தில்லி: நாட்டின் பல மாநிலங்களில் கடந்த வாரமே பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட்ட நிலையில், தலைநகர் புது தில்லியில் இன்று பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியது.

புதன்கிழமை காலை புது தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.21-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.89.53க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் விலை நாள்தோறும் அதிகரிக்கிறது. நேற்று இது 99 ரூபாயாக இருந்தது. இன்று 100 ரூபாயாகிவிட்டது. விரைவில் இது குறையும் என்று எதிர்பார்ப்பதாக இளைஞர் ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த ஞாயிறன்று, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கா்நாடகம், ஜம்மு-காஷ்மீா், ஒடிஸா, தமிழகம், கேரளம், பிகாா், பஞ்சாப், லடாக், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது.

அது மட்டுமல்லாமல், ராஜஸ்தான், ஒடிஸா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.100-ஐ கடந்தது. 

விலை உயரக் காரணம்: பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பே காரணம் என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது. சா்வதேச அளவில் கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், அதன் உற்பத்தி அதிகரிக்கப்படாததால் விலை உயா்ந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலையுடன் சோ்த்து மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் கலால், மதிப்புக் கூட்டு வரியும் (வாட்) பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று பல மாநில அரசுகள் கோரி வருகின்றன. பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனா். எரிபொருளை சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டு வர வேண்டுமென்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com