மத்திய அமைச்சரவை: புதிதாக 15 அமைச்சர்கள், 28 இணை அமைச்சர்கள்

மத்திய அமைச்சகம் விரிவாக்கம் செய்யப்பட்டதையடுத்து புதிதாக 15 அமைச்சர்கள், 28 இணை அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஜோதிராதித்ய சிந்தியா
மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஜோதிராதித்ய சிந்தியா

மத்திய அமைச்சகம் விரிவாக்கம் செய்யப்பட்டதையடுத்து புதிதாக 15 அமைச்சர்கள், 28 இணை அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாராயண் தாட்டு ரானே, சர்பானந்த சோனோவால், விரேந்திர குமார், ஜோதிராதித்ய சிந்தியா, ராமசந்திர பிரசாத் சிங், அஸ்வினி வைஸ்னவ், பசுபதி குமாா் பராஸ், கிரண் ரிஜிஜு, ராஜ் குமார் சிங், ஹர்தீப் சிங் புரி, மன்சுக் மாண்டவியா, பூபேந்தர் யாதவ், புருசோத்தமன் ரூபலா, கிஷண் ரெட்டி, அனுராக் சிங் தாக்குர் ஆகிய 15 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.  

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட மீதமுள்ளவர்கள் இணை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மத்திய அமைச்சர்களாக இருந்த ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர்,  ரமேஷ் பொக்ரியால், சந்தோஷ் கங்குவார், தபாஸ்ரீ சௌத்ரி, சதானந்த கவுடா, தாவர்சந்த் கெலாட், ஹர்ஷவர்தன், பபூல் சுப்ரியோ, தோட்ரே சஞ்சய் சாமரோ, ரத்தன் லால் கட்டாரியா, பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோர் இன்று ராஜிநாமா செய்ததை தொடர்ந்து மீதமுள்ள மத்திய அமைச்சர்கள் தங்களின் பதவிகளில் தொடர்கிறார்கள்.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் அமைந்துள்ளது.  ஆட்சி அமைத்த பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மத்திய அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com