/

கேரளத்தில் புதிதாக 13,772 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 13,772 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஜூலை 2021, 4:31 pm

DIN

கேரளத்தில் புதிதாக 13,772 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,27,152 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 13,772 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மலப்புரம் 1981, கோழிக்கோடு 1708, திரிசூர் 1403 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30.25 லட்சமாக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 142 பேர் பலியானார்கள். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 14,250ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 1,27,152 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து 11,414 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 29,00,600ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் 3,91,444 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.