/

வீரபத்ர சிங் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

ஹிமாசலப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரபத்ர சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

News image

வீரபத்ர சிங் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

Updated On :8 ஜூலை 2021, 4:56 am


இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரபத்ர சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் இரங்கல் செய்தியில், ஸ்ரீ வீரபத்ர சிங், மிக நீண்ட காலம் அரசியலில் இருந்தவர், மிகச் சிறந்த நிர்வாகி, சட்டப்பேரவை அனுபவம் கொண்டவர். மாநிலத்துக்காகவும், மாநில மக்களுக்காகவும் மிகச் சிறந்த பணியாற்றியாவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

வீரபத்ர சிங், கரோனாவுக்குப் பிந்தைய பிரச்னைகள் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிம்லாவில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 87. 

அவருக்கு சிகிச்சையளித்து வந்த இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் ஜனக் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், அவர் ஏபர்ல் 30-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எங்களது மருத்துவக் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்தது. இரண்டு நாள்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது. வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது என்றார்.

இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்த வீரபத்ர சிங் 9 முறை எம்எல்ஏ.,வாகவும், 5 முறை எம்பி.,யாகவும் இருந்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.