சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் எல் ரமணா ராஜிநாமா

தெலங்கானாவின் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் எல் ரமணா பதவியை இன்று ராஜிநாமா செய்தார்.  

News image
Updated On :9 ஜூலை 2021, 1:13 pm

DIN

தெலங்கானாவின் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் எல் ரமணா பதவியை இன்று ராஜிநாமா செய்தார். 
மேலும் அவர் தனது ராஜிநாமா கடிதத்தை தெலுங்கு தேசம் கட்சியின் தேசியத் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு அனுப்பி வைத்தார். கடிதத்தில், மக்களுடன் மிகவும் நெருக்கமான முறையில் பணியாற்றுவதற்காக பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
அத்துடன் தனக்கு ஆதரவு அளித்த தெலுங்கு தேசம் கட்சி மற்றும் அதன் தலைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே எல் ரமணா ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் விரைவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.