ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புஎச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?
/

உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உடல்நிலையில் முன்னேற்றம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் கல்யாண் சிங்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்து வரும் எஸ்ஜிபிஜிஐ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளத

News image

உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உடல்நிலையில் முன்னேற்றம்

Updated On :10 ஜூலை 2021, 7:08 am

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் கல்யாண் சிங்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்து வரும் எஸ்ஜிபிஜிஐ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

லக்னௌவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கல்யாண் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், மருத்துவமனை இயக்குர் பேராசிரியர் ஆர்.கே. திமான் தெரிவித்துள்ளார். கல்யாண் சிங்குக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகளை இவர் நாள்தோறும் கண்காணித்து வருகிறார்.

அவர் நல்ல நினைவாற்றலுடன் இருக்கிறார். இதயவியல், நரம்பியல் உள்ளிட்ட பலதுறை மருத்துவ நிபுணர்கள், கல்யாண் சிங்கின் உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாஜக மூத்த தலைவரான கல்யாண் சிங், உடல்நலக் குறைவால் கடந்த 4-ஆம் தேதி லக்னௌவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவா் மருத்துவா்களின் கண்காணிப்பில் உள்ளாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.