/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 8 ஆயிரம் பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 8,296 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :10 ஜூலை 2021, 3:40 pm

DIN


மகாராஷ்டிரத்தில் புதிதாக 8,296 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், பலியானோர் எண்ணிக்கைள் அடங்கிய தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 8,296 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 61,49,264 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 6,026 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 179 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 59,04,466 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 1,25,528 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 1,14,000 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.