ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புஎச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?
/

மழை காரணமாக படகிலேயே நடந்த திருமண ஊர்வலம்

பிகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோபர்சிதா கிராமத்தில், படகிலேயே திருமண ஊர்வலம் நடைபெற்றது.

News image

மழை காரணமாக படகிலேயே நடந்த திருமண ஊர்வலம்

Updated On :10 ஜூலை 2021, 10:26 am


சமஸ்திபூர்: பிகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோபர்சிதா கிராமத்தில், படகிலேயே திருமண ஊர்வலம் நடைபெற்றது.

மணமகள் வீட்டுக்கு, மணமகன் வீட்டார் ஊர்வலமாக வருவது வழக்கம். ஆனால், கிராமமே வெள்ளத்தில் மூழ்கிவிட்டதால், மணமகன் வீட்டார் படகிலேயே ஊர்வலமாக வந்தனர். திருமணம் முடிந்த பிறகும் பாரத் எனப்படும் நிகழ்ச்சியும், அதே படகில்தான் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு மணமக்கள் வீட்டாரும், படகிலேயே சென்று விருந்து சாப்பிட்டனர். இது தொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.

பருவமழை தீவிரமடைந்த நிலையில் பாகமதி நதியில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்ததன் காரணமாக, கோபர்சிதா கிராமமே வெள்ளத்தில் மூழ்கியது.

வெள்ளம் காரணமாக திருமணத்தை தள்ளிப் போட மணமில்லாமல், மூன்று படகுகளை வாடகைக்குப் பிடித்து, திருமண ஏற்பாடுகள் செய்து முடித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.