எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கேரளத்தில் குழந்தை உள்பட மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ்

கேரளத்தில் குழந்தை உள்பட மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

News image
Updated On :12 ஜூலை 2021, 4:04 am

DIN

கேரளத்தில் குழந்தை உள்பட மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், 22 மாதக் குழந்தை, 45 வயது முதியர் மற்றும் 29 வயது சுகாதாரப் பணியாளர் ஆகியோருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் மாநிலத்தில் மொத்தம் 18 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. 
இரண்டு பகுதிகளாக பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட 27 மாதிரிகளில் 26 மாதிரிகள் நெகட்டிவ் என வந்துள்ளன. அதேபோல் மூன்றாவது பகுதியாக ஞாயிற்றுக்கிழமை எட்டு மாதிரிகள் அனுப்பட்டதில் மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
திருவனந்தபுரம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிகளிலும், ஆலப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் பிரிவிலும் பரிசோதனை வசதிகளை அரசு ஏற்பாடு செய்துள்ளது என்றார். 
கரோனா தொற்று பரவலும், ஜிகா தீநுண்மி பரவலும் அதிகரித்து வருவதால், கேரளத்துக்கு உதவுவதற்காக மத்திய நிபுணா் குழு மாநிலத்துக்கு விரைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.