கேரளத்தில் புதிதாக 7,798 பேருக்கு கரோனா
கேரளத்தில் புதிதாக 7,798 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 100 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
கேரளத்தில் புதிதாக 7,798 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 100 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, கேரளத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 30,73,134 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 14,686 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 85,307 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 9.14 சதவிகிதம்.
இதுபற்றி கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
"திங்கள்கிழமை நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் 32 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 7,202 பேர் தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 530 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 34 பேர் சுகாதாரப் பணியாளர்கள்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...