பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தமிழகத்தில் மேலும் 4 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய கல்வித் துறை அமைச்சர்

தமிழக மாணவர்களின் வசதிக்காக நீட் தேர்வு நடத்த மேலும் 4 நகரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

News image
Updated On :15 ஜூலை 2021, 10:55 am

DIN


தமிழக மாணவர்களின் வசதிக்காக நீட் தேர்வு நடத்த மேலும் 4 நகரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதன்கிழமை மாலை தில்லி சென்றார். மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை வியாழக்கிழமை சந்தித்த மா. சுப்பிரமணியன், இந்தாண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, தர்மேந்திர பிரதான் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

"நீட் தேர்வு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் என்னைச் சந்தித்தார். இதுதொடர்பான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின் பின்னணி குறித்து அவரிடம் விளக்கினேன்.

மேலும் மலையாளம் மற்றும் பஞ்சாபி மொழிகள் சேர்க்கப்பட்டு நீட் தேர்வு மொழிகளின் எண்ணிக்கை 11-இல் இருந்து 13-ஆக உயர்த்தப்பட்டுள்ளதையும் அவரிடம் பகிர்ந்தேன். ஏற்கெனவே தமிழ் மொழியில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக மாணவர்களின் வசதிக்காக நீட் தேர்வு நடத்த செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் என மேலும் 4 நகரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தகவலையும் அவரிடம் கூறினேன். கடந்தாண்டு 14 ஆக இருந்த தேர்வு நடைபெறும் நகரங்கள் 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. தேர்வு மையங்களும் அதிகரிக்கப்படவுள்ளன."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.