டிரோன் பயன்படுத்த தளர்வுகளுடன் கூடிய புதிய விதிமுறைகள் அறிவிப்பு

இந்தியாவில் டிரோன் பயன்படுத்த தளர்வுகளுடன் கூடிய புதிய விதிமுறைகளை விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

இந்தியாவில் டிரோன் பயன்படுத்த தளர்வுகளுடன் கூடிய புதிய விதிமுறைகளை விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 

விமான போக்குவரத்து அமைச்சகம் இந்தியாவில் ட்ரோன் இயக்குவது குறித்து புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் நம்பிக்கை, கண்காணித்தல், சுய சான்றிதழ் உள்ளிட்டவை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

யுஏஎஸ் எனப்படும் ஆளில்லா விமான விதிமுறைகள் 2021-ல் 25 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள நிலையில், டிரோன் விதிமுறைகள் 2021-ன் படி, டிரோன் இயக்க பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்பங்கள் 6 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. யூஏஎஸ் விதிமுறைகள் 2021 ஆனது இந்த வருடம் மார்ச்12 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் டிரோன் விதிமுறைகள் 2021 ஆனது நடைமுறைக்கு பரும்போது, யுஏஎஸ் விதிமுறைகள் 2021 ஆனது நீக்கப்படும். 

டிரோன்களின் அளவை பொறுத்து அல்லாமல் இயங்குகின்ற உயரத்தைப் பொறுத்து அதற்கான கட்டணம் இருக்கும். மேலும் டிரோனுக்கான தனிப்பட்ட அங்கீகார எண், சர்வேதேச தரத்துக்கான சான்றிதழ், பராமரிப்புக்கான சான்றிதழ், மாணவர்களுக்கான ரிமோட் பைலட் உரிமம் உள்ளிட்ட அனுமதிகள் தேவையில்லை. 

பச்சை மண்டல பகுதிகளில் 400 அடி வரையும், விமான நிலைய சுற்றளவில் 200 அடி வரையும் டிரோன் பறக்க விமானத்துக்கான அனுமதி பெற தேவையில்லை. மிகச் சிறிய (மைக்ரோ)  ட்ரோன்கள் மற்றும் நானோ ட்ரோன்களுக்கு விமான ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. 

இந்த டிரோன் விதிமுறைகள் 2021 குறித்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். மேலும் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்களின் டிரோன் இயக்குவதற்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com