நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரினோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க மத்திய அமைச்சரிடம் கோரினோம் என மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க மத்திய அமைச்சரிடம் கோரினோம் என மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தில்லியில் சுகாதார அமைச்சர் மாண்டவியாவை சந்தித்த பின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரினோம். அதுகுறித்து பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
மேலும் பாடப்பிரிவு வித்தியாசம், ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைகளை மத்திய அமைச்சரிடன் விளக்கினோம். தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசி டோஸ் தேவை என்பதால் கூடுதலாக ஒதுக்கக் கோரினோம். தமிழகத்திற்கன தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்வதாகவும் மத்திய அமைச்சர் உறுதி அளித்தார்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை மிகவிரைவில் தொடங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். கோவையில் எய்ம்ஸ் அமைப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் மத்திய அமைச்சர் கூறினார்.
கரோனா இரண்டாம் அலை பாதிப்புகளை சரிசெய்ய 800 கோடி ரூபாய் நிதியை விடுவிப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.1,500 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடுகளை அளித்த பின் மீதமுள்ள தொகையை விடுவிப்பதாக கூறினார். இவ்வாறு அவர் தெவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...