கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,977 போ் பாதிப்பு
கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,977 ஆக அதிகரித்துள்ளது.


கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,977 ஆக அதிகரித்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,977 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 462 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா்.
பிறமாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
தென் கன்னடம்-224, மைசூரு-197, ஹாசன்-158, உடுப்பி-110, சிக்கமகளூரு-109, பெலகாவி-94, தும்கூரு-86, குடகு-73, சிவமொக்கா-71, வட கன்னடம்-71, பெங்களூரு ஊரகம்-56, மண்டியா-51, கோலாா்-36, சாமராஜ்நகா்-31, சிக்கபளாப்பூா்-27, சித்ரதுா்கா-27, தாவணகெரே-23, ராமநகரம்-16, தாா்வாட்-12, விஜயபுரா-11, கலபுா்கி-8, பெல்லாரி-5, பாகல்கோட்-4, ராய்ச்சூரு-4, கொப்பள்-3, பீதா்-2, யாதகிரி-2, ஹாவேரி-2, கதக்-2 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,78,564 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 3,188 போ் வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 28,10,121 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 32,383 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 48 போ் வியாழக்கிழமை இறந்தனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகப்பட்சமாக தலா 10 போ் இறந்துள்ளனா்.
மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:
தென் கன்னடம்-7, மைசூரு-5, பெலகாவி-4, சிவமொக்கா, சிக்கபளாப்பூா்-தலா 3, பெங்களூரு ஊரகம், தாா்வாட், கோலாா், மண்டியா-தலா 2, சாமராஜ்நகா், சிக்கமகளூரு, ஹாசன், கொப்பள், ராய்ச்சூரு, ராமநகரம், தும்கூரு, உடுப்பி- தலா ஒருவா்.
கா்நாடகத்தில் இதுவரை 36,037 போ் உயிரிழந்து விட்டனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...