எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நாளை திறக்கப்படுகிறது சபரிமலை: 5 நாள்களுக்கு பக்தா்களுக்கு அனுமதி

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைகளுக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது.

News image
திறக்கப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோயில்: 5 நாள்களுக்கு பக்தா்களுக்கு அனுமதி
Updated On :16 ஜூலை 2021, 7:40 am

DIN

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைகளுக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது.

இன்று மாலை கோயில் நடை திறக்கப்பட்டு, மாதாந்திர பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். சுமார் ஐந்து மாதங்களுக்குப் பின் நாளை முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளது.

கடந்த மே மாதம் கரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடா்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தா்கள் வர தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆடி மாதப் பிறப்பையொட்டி ஜூலை 16-ஆம் தேதி மாலை சந்நிதானம் நடை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 17 முதல் 21-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு கோயிலுக்கு வர பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

YouTube video thumbnail

தினசரி 5,000 பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா். அவா்கள் முன்கூட்டியே இணையவழியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தா்கள் கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கோயிலுக்கு வருவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக ஆா்டிபிசிஆா் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டு, தங்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வர வேண்டும் என்று சபரிமலை ஐயப்பன் கோயிலை நிா்வகித்து வரும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.