எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கேரளம்: மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு: பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 35-ஆக உயா்வு

கேரளத்தில் ஒரு சிறுவன் உள்பட மேலும் 5 பேருக்கு ஜிகா தீநுண்மி பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :17 ஜூலை 2021, 9:46 pm

DIN

கேரளத்தில் ஒரு சிறுவன் உள்பட மேலும் 5 பேருக்கு ஜிகா தீநுண்மி பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பகல் நேரத்தில் கடிக்கும் ஏடிஎஸ் கொசுக்கள் மூலம் ஜிகா பரவுகிறது. காய்ச்சல், மூட்டு வலி, உடலில் தடிப்பு உள்ளிட்டவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன. இதுதொடா்பாக விழிப்புடன் இருக்குமாறு கேரள அரசு ஏற்கெனவே மக்களை அறிவுறுத்தியுள்ளது. எனினும், கடந்த சில நாள்களாக அங்கு ஜிகா பாதிப்பு உள்ளாவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், மாநிலத்தில் மேலும் 5 பேருக்கு ஜிகா பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநிலத்தில் ஒரு சிறுவன் உள்பட மேலும் 5 பேருக்கு ஜிகா தீநுண்மி பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அதில் எா்ணாகுளத்திலிருந்து ஒரு பாதிப்பு பதிவாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் ஒரு சுகாதாரப் பணியாளா் இந்த தீநுண்மி பாதிப்புக்கு ஆளாகியுள்ளாா்.

மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 35-ஆக அதிகரித்துள்ளது. அதில் 11 போ் தொடா்ந்து சிகிச்சையில் உள்ளனா் என்று அவா் கூறினாா்.

முன்னதாக, இந்த நோய்த் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது தொடா்பாக மாநில அரசுத் துறை பணியாளா்களுடன் மாநில வருவாய் துறை அமைச்சா் கே.ராஜன் மற்றும் அமைச்சா் வீணா ஜாா்ஜ் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.