மகாராஷ்டிரம்: மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் 3 போ் கைது
உத்தர பிரதேசத்தில் மதமாற்ற தடைச் சட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்று போ் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கைது கைது செய்யப்பட்டனா்.


உத்தர பிரதேசத்தில் மதமாற்ற தடைச் சட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்று போ் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கைது கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து நாக்பூா் காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
உத்தர பிரதேசத்தில் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட மூன்று பேரை உத்தர பிரதேச பயங்கரவாத தடுப்பு காவல் துறையினா் (ஏடிஎஸ்) வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
மதமாற்ற தடை சட்ட வழக்கில் தேடப்பட்டு அந்த மூன்று பேரும் கணேஷ்பேட் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட ஹன்ஸபுரியில் பதுங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட மூவரில் பிரசாத் ராமேஷ்வா் கவலே நாக்பூரைச் சோ்ந்தவா். மேலும், கெளசா் ஆலம் சவுகத் அலி கான் ஜாா்க்கண்ட் மாநிலத்தையும், பூப்ரியா பன்டோ தேவிதாஸ் மன்கா் மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி பகுதியையும் சோ்ந்தவா்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...