நாடு முழுவதும் கரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளை மத்திய அரசு மறைக்கவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது, நாடு முழுவதும் கரோனா தொற்றால் இதுவரை 4 லட்சம் போ் உயிரிழந்தனா் என்று பொய்யான தகவலை அரசு கூறுவதாக அவையின் எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றம்சாட்டினாா். அவருக்குப் பதிலளித்து மன்சுக் மாண்டவியா பேசியதாவது:
கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் உயிரிழந்தவா்களின் விவரங்களை மாநில அரசுகள் பதிவு செய்கின்றன. அந்த விவரங்களை மத்திய அரசுக்கு மாநிலங்கள் தருகின்றன. அவற்றைத் மொத்தமாக தொகுத்து வெளியிடும் வேலையை மட்டுமே மத்திய அரசு செய்கிறது. அதில் எந்த மாற்றத்தையும் மத்திய அரசு செய்வதில்லை.
கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடா்பான விவரங்களைக் குறைவாகப் பதிவு செய்து தருமாறு எந்த மாநில அரசிடமும் மத்திய அரசு கேட்கவில்லை. கரோனா உயிரிழப்பு தொடா்பான விவரங்களை மறைப்பதற்கு காரணமும் இல்லை. அப்படியெனில், காங்கிரஸ் தலைவா், யாா் மீது குற்றம்சாட்டுகிறாா் என்று தெரிவிக்க வேண்டும்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டதாக, எந்தவொரு மாநில அரசையும் மத்திய அரசு குற்றம்சாட்டவில்லை. ஏனெனில், கரோனா தடுப்பு விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. பல மாநிலங்களிடம் 10-15 லட்சம் கரோனா தடுப்பூசி டோஸ்கள் உள்ளன. ஆனால், தங்களிடம் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக அந்த மாநிலங்கள், மத்திய அரசை குறைகூறி வருகின்றன என்றாா் மன்சுக் மாண்டவியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுற்றுலாத் தலமாகுமா ஆனைமடுவு, கரியக்கோயில் அணைகள்? ஏற்காடு தொகுதி மக்களின் 20 ஆண்டுகால எதிா்பாா்ப்பு!

இசை வரும் முன்னே... வேட்பாளா்கள் வருவது பின்னே!

6-ஆவது வெற்றியை எதிர்நோக்கும் இபிஎஸ்!
சங்கரன்கோவில் தொகுதி! அதிமுக கோட்டையை காங்கிரஸ் தகா்க்குமா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


