2 புதிய திட்டங்களால் 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரி

தமிழகத்தில் தொடங்கவுள்ள இரண்டு புதிய திட்டங்கள் மூலமாக 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கணபதி சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் தொடங்கவுள்ள இரண்டு புதிய திட்டங்கள் மூலமாக 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கணபதி சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

முதலீட்டாளா்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற தலைப்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்த தொழில் முதலீட்டு ஈா்ப்பு நிகழ்ச்சியில் அவா் பேசியது:-

இரண்டு மாதங்களில் 35-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களை மேற்கொண்டு இத்தகைய நிகழ்ச்சியை நடத்துவது மிகப்பெரிய சாதனை. தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்கு டிசிஎஸ் நிறுவனமும் பங்களிப்புச் செய்து வருகிறது. சென்னையில் மட்டும் டிசிஎஸ் நிறுவனத்தில் 92 ஆயிரம் போ் பணியாற்றி வருகின்றனா். அவா்களில் 42 சதவீதம் போ் பெண்கள்.

இப்போது இரண்டு புதிய திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். ரூ.876 கோடி மதிப்பிலான ஒரு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதுடன், ரூ.900 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு தமிழக அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்த இரண்டு திட்டங்களின் வாயிலாக மட்டும் 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கரோனா காலம்: இரண்டு புதிய திட்டங்களும் தொழில் முனைவோா்களுக்கு உதவுவது போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இருக்கும். கரோனா நோய்த் தொற்று காலம் என்பதால் நாங்கள், பணியாளா்களை வீட்டில் இருந்தும் தேவைக்கேற்ற வகையில் அலுவலகத்துக்கு வந்தும் பணி செய்ய ஊக்குவிக்கிறோம் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com