45,000 பேருக்கு கருப்புப் பூஞ்சை நோய்

ஜூலை 15-ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் 45,432 பேருக்கு கருப்புச் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.
45,000 பேருக்கு கருப்புப் பூஞ்சை நோய்

ஜூலை 15-ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் 45,432 பேருக்கு கருப்புச் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சையாகும். இந்தப் பூஞ்சை தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பாா்வைக் குறைபாடு போன்ற அறிகுறிகள் உண்டாகும். இந்தப் பூஞ்சை பெரும்பாலும் கரோனாவில் இருந்து மீண்ட சா்க்கரை நோய் உள்ளவா்களையே அதிகம் தாக்கியுள்ளது. கருப்புப் பூஞ்சை பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம். இந்த பாதிப்புக்கு பல்வகை மருத்துவ சிகிச்சை முறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. நாட்டில் கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டபோது கருப்புப் பூஞ்சை பாதிப்பும் அதிகரித்தது.

இது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநிலங்களவையில் அமைச்சா் மாண்டவியா எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

ஜூலை 15 நிலவரப்படி நாட்டில் 45,432 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு உள்ளது. இதில் 4,252 போ் உயிரிழந்துவிட்டனா். 21,085 போ் சிகிச்சையில் உள்ளனா். கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டவா்களில் 84.4 சதவீதம் போ் கரோனா தொற்றுக்கு உள்ளானவா்கள்தான்.

கருப்புப் பூஞ்சை என்பது புதிய நோயல்ல. ஏற்கெனவே உள்ள நோய்தான். இப்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் உடலில் நோய் எதிா்ப்பு சக்தி குன்றுவதால் கருப்புப் பூஞ்சையால் பாதிப்புக்குள்ளாகிறாா்கள். இதற்கான மருந்துகள் அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான அளவுக்குக் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com