இந்தியாவில் கரோனா இறப்பு எண்ணிக்கை: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் பெருந்தொற்று காலத்தில் கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் உயிரிழந்திருக்கலாம் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் பெருந்தொற்று காலத்தில் கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் உயிரிழந்திருக்கலாம் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா காரணமாக உலக நாடுகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக, இறப்பு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமான தகவலை விட அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டது,

இந்நிலையில், இந்தியாவில் பெருந்தொற்று காலத்தில் 40 லட்சத்து 90 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தலைமையில் உலகளாவிய வளர்ச்சிக்கான மையம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. பெருந்தொற்று தொடங்கிய காலத்திலிருந்து இந்த ஜூன் மாதம் வரை நிகழ்ந்த இறப்புகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமான தகவலின்படி, இந்தியாவில் இதுவரை 4 லட்சத்து 14 ஆயிரம் பேர் கரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவலை தொடர்ந்து இறப்புகளை மீண்டும் கணக்கெடுக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா தாக்கம் குறிப்பாக டெல்டா வகை பரவல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகமாக இருந்தது. மே மாதம் மட்டுமே 1,70,000 பேர் கரோனா காரணமாக உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதுகுறித்து உலகளாவிய வளர்ச்சிக்கான மையம் வெளியிட்ட அறிக்கையில், "பெருந்தொற்று காலத்தில் ஆயிரக்கணக்கானோர் இல்லாமல் லட்சக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என்பது தெளிவாக தெரிகிறது. பெருந்தொற்று காலத்தில் 34 லட்சம் முதல் 49 லட்சம் வரை உயிரிழந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான இறப்புகளும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தை ஒப்பிட்டு இறப்புகள் கணிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com