47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

வடக்கு காஷ்மீரின் சோபோர் பகுதியில் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் தீவிரவாதிகள்  பதுங்கியிருந்த தகவலை உறுதிசெய்தனர் . 

News image
காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Updated On :23 ஜூலை 2021, 6:56 am

DIN

 வடக்கு காஷ்மீரின் சோபோர் பகுதியில் காவல்துறை மற்றும் பாதுகாப்புப்  படையினர் நடத்திய சோதனையில் தீவிரவாதிகள்  பதுங்கியிருந்த தகவலை உறுதிசெய்தனர் . 

பின் காவல் மற்றும் பாதுகாப்புப்  படையினர் தாக்குதலை மேற்கொண்டனர். இதில்  பதுங்கியிருந்த   இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் .

இதுகுறித்து காவல்துறைத்  தலைவர்  விஜயகுமார் அளித்த தகவலின் படி , ' தொடர்ந்து வடக்கு காஷ்மீரில் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வந்த பயாஸ் வார் என்பவனும் இந்தத் தாக்குதலில் உரிழந்ததாகவும் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த அறையில் சில துப்பாக்கிகளும், தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது ' எனக் கூறிய பின்  காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.